உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி'

ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி'


குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரொமாண்டிக் பேண்டஸி கலந்து உருவாகும் இந்த படத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, 'கட்சி செரா' பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். இவர்களை தவிர ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி உள்ளனர்.

காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய கதையாகவும் 'டபுள் ஆக்குபன்சி' உருவாகி உள்ளது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது. சாம் சி எஸ் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !