உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்'

காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்'


வி கேந்திரன் இயக்கத்தில் விமல், சங்கீதா, பால சரவணன் நடிக்கும் படம் 'வடம்'. இமான் இசையமைக்கிறார். கோவை மாசாணி அம்மன் கோயிலில் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் முதல் பாடலான 'பாண்டி முனி' பிப்ரவரி 16ம் தேதி வெளியான நிலையில் முன்னதாக படக்குழுவினர் மதுரை பாண்டி முனி கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

வடம் என்பது ஒருவகையான ஜல்லிக்கட்டு. வட மாவட்டங்களில் விளையாடப்படுகிறது. குறிப்பாக காளையை சுமார் 50 அடி நீளமுள்ள கயிற்றால் (வடம்) பிணைத்து, ஒரு குறிப்பிட்ட சுற்றளவிற்குள் அதை அடக்க முயற்சிக்கும் ஜல்லிக்கட்டின் ஒரு பாதுகாப்பான வடிவம் ஆகும். இந்த முறையில், காளையின் கொம்பில் உள்ள பரிசு டோக்கனை 30 நிமிடங்களுக்குள் 7-9 பேர் கொண்ட குழுவினர் அவிழ்க்க வேண்டும், இது வட தமிழகத்தில் பிரபலம். இந்த வகையில் காளை அடக்குபவராக விமல் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்சன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !