ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!
ADDED : 45 days ago
தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. இந்த படத்தில் அவருடன் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது 'வாரணாசி' படத்தை அடுத்து 'அர்ஜுன் ரெட்டி, அனிமல்' படங்களை அடுத்து தற்போது பிரபாஸ் நடிப்பில் 'ஸ்பிரிட்' என்ற படத்தை இயக்கி வரும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்க போகிறார் மகேஷ் பாபு. இந்த படத்துக்கு 'டெவில்' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். வாரணாசி படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்ததும் இந்த டெவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உள்ளதாம்.