அமலாபாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி
மலையாள நடிகையான அமலாபால் தமிழிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கடுத்த சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அமலா பால், பின்னர் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய யோகாசனம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதோடு கணவருடன் சேர்ந்து பார்ட்டி செய்த வீடியோக்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது அமலாபாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அது குறித்த வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார் . இன்று அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் போது அமலா பால் மற்றும் அவரது கணவர் தேசாய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகிறார்கள்.