கனவை நினைவேற்றிய வீஜே மணிமேகலை
ADDED : 547 days ago
சின்னத்திரை தொகுப்பாளினியான வீஜே மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5-ல் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் தனது கனவு வீட்டை நீண்ட நாட்களாக கட்டி வரும் மணிமேகலை தற்போது மிகவும் எளிமையாக கிரகப்பிரவேசத்தை முடித்துள்ளார். இதனை தனது யு-டியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் 'எனது கனவு வீடு பிரம்மாண்டமாக இருக்கும். இது பக்கத்தில் கட்டிய பார்ம் ஹவுஸ். இருந்தாலும் இதுதான் நாங்கள் முதலில் கட்டிய வீடு' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.