உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்து வழக்கு: தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

விவாகரத்து வழக்கு: தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு நடந்தது. இவர்களின் 19 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் இருவர் வீட்டிலும் வளர்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் வருகிற அக்டோபர் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !