உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா

இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா

தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்களாக ஒரு நடிகை முன்னணி நடிகையாக இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அப்படி ஒரு பெருமையைப் பெற்றுள்ளவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் த்ரிஷா.

2002ம் ஆண்டில் வெளியான 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் சூப்பர்ஹிட் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் அஜித்துடன் 'விடாமுயற்சி', கமல்ஹாசனுடன் 'தக் லைப்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா', மலையாளத்தில் 'ராம், ஐடன்டிடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்னும் திருமணமாகவில்லை என்றாலும் இத்தனை வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என இளம் கதாநாயகிகளே த்ரிஷாவைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !