மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
478 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
478 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
478 days ago
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ‛சுச்சி லீக்ஸ்' விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பிரச்னைக்கு பின் சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார்.
சில தினங்களுக்கு முன் சுசித்ரா அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி அதிர வைத்தார். மேலும் அவரை பற்றி தாறுமாறான கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியவர் மேலும் பல பிரபலங்களை பற்றியும் தாறுமாறாக விமர்சித்தார்.
இந்நிலையில் சுசித்ராவிற்கு பதில் அளித்துள்ளார் கார்த்திக் குமார் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை வெளியில் சொல்ல தயங்க மாட்டேன். அதை மறைத்து வைத்து மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டேன். செக்ஸ் என்பது தனிப்பட்டவர்களின் விஷயம். சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் நிகழ்ச்சி நடந்தால் அதில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். அவர்களை நான் ஆதரிப்பதால் நானும் ஓரினச்சேர்க்கையாளன் என்று அர்த்தம் இல்லை. நான் அப்படிப்பட்டவன் என்றால் அதை வெளிப்படையாக சொல்வேன். அதற்காக நான் அசிங்கப்பட மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.
478 days ago
478 days ago
478 days ago