ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள்
ADDED : 506 days ago
சின்னத்திரை நடிகர்களுக்கு தற்போதெல்லாம் அதிகளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகைகளான நிஹாரிகா, சங்கீதா லியோனிஸ் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் ஒரே படத்தில் ஒன்றாக கமிட்டாகியுள்ளனர். பேண்டஸி மூவியாக தயாராகவுள்ள குற்றம் புதிது என்கிற இந்த திரைப்படத்தின் பணிகள் சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து மூவரது சினிமா என்ட்ரிக்கும் ரசிகர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.