இயக்குனரே பொறுப்பேற்பு
ADDED : 512 days ago
பிரமாண்ட இயக்குனரை பொறுத்தவரை, எப்போதுமே, ஆரம்பத்தில் போடும் பட்ஜெட்டுக்குள் நிற்க மாட்டார். அதிகப்படியான நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார். இதன் காரணமாகவே, கடைசி நேரத்தில், அவருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, முட்டிக்கொள்ளும்.
தற்போது, தெலுங்கு நடிகரை வைத்து, பிரமாண்டம் இயக்கி வரும் படத்தின் பட்ஜெட்டும், தாறுமாறாக எகிறி விட்டதாம். அதை பார்த்து, தயாரிப்பாளர், ஆரம்பத்தில் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டதாக, பிரமாண்ட இயக்குனரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கடுப்பான பிரமாண்டம், கடைசியாக படமாக்கிய மூன்று நாள் படப்பிடிப்புக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.