இலங்கை தீவில் அற்புதமான சுற்றுலா- டூ பீஸ் படங்களை வெளியிட்ட திவ்யபாரதி!
ADDED : 702 days ago
ஜி.வி .பிரகாஷ் குமார் நடித்த ‛பேச்சிலர்' என்ற படத்தில் அறிமுகமானவர் திவ்யபாரதி. அதையடுத்து மீண்டும் ஜி.வி .பிரகாஷின் 25வது படமான ‛கிங்ஸ்டன்' என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். அதோடு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யபாரதி, அவ்வபோது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு தான் சுற்றுப்பயணம் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் டூ பீஸ் உடையில் அவர் நீராடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதோடு இலங்கை தீவில் அற்புதமான ஒரு சுற்றுலா பயணம் என்றும் அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த டூ பீஸ் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.