'ராயன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் - ஏ.ஆர்.ரஹ்மானின் கானா பாடல் நாளை வெளியாகிறது!
ADDED : 508 days ago
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‛ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் ஜூன் 13ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுசுடன் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், வரலக்ஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் மே 24ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறார் தனுஷ். அது ஒரு கானா பாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி இருவரும் சைக்கிளில் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.