உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்மபூஷன் விருது : பொதுவான நன்றி தெரிவித்த மம்முட்டி

பத்மபூஷன் விருது : பொதுவான நன்றி தெரிவித்த மம்முட்டி


2026ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகள் முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டது. மலையாள நடிகரான மம்முட்டி பத்மபூஷன் விருது பெற உள்ளார். அவருக்கு மலையாளத் திரையுலகினரும், இதர திரையுலகினரும், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று முதலே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

பலரும் வாழ்த்துகளைச் சொன்னாலும், அதில் முக்கியமானவர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்வது சமூக வலைதள வழக்கம். இருந்தாலும், மம்முட்டி யாரையும் 'டேக்' செய்யாமல் பொதுவான ஒரு நன்றியைப் பதிவு செய்துள்ளார். அதில்,

“எனது தாய்நாட்டிற்கு நன்றி....

'பத்ம பூஷன்'

இந்த குடிமையியல் விருதுடன் என்னை கௌரவித்ததற்காக நாட்டிற்கு, மக்களுக்கு, அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்,”

என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !