சன்னி தியோல், ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் : ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கிறார்
நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் தமிழில் செலக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர், கடந்த சில வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார். அங்கே ஹிந்தியில் தனக்கான வாய்ப்புகளை தேடி வரும் அவர், கடந்த 2024ல் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களிலும் 2025ல் டப்பா காட்ரல் என்கிற படத்திலும் நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சன்னி தியோல் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஜோதிகா.
ஆண்டனி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்த்வானி இருவரும் இணைந்து நடத்தி வரும் எக்ஸெல் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இதை இபாலாஜி கணேஷ் இயக்குகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சமீபத்தில் வெளியான பார்டர் 2 திரைப்படத்தின் மூலம் சன்னி தியோல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூடாக இந்த புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.