உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு

சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு

3 பிஎச்கே படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து வரும் புதிய படம் ரவுடி அண்ட் கோ. இதில் அவருடன் ராஷி கண்ணா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரேவா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை கடந்த 2023ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் டக்கர் என்ற படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரீஸ் இயக்கி உள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சித்தார்த், யோகி பாபு உள்பட 4 பேர் ரவுடி கெட்டப்பில் கையில் கத்தியுடன் ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார்கள். டார்க் காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !