ரீ ரிலீசில் வசூல் சாதனை செய்த அஜித்தின் மங்காத்தா
ADDED : 3 minutes ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 23ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கு அஜித்தின் ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் திரைக்கு வந்த நான்கு நாட்களில் உலக அளவில் இந்த படம் 17.5 கோடி வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 16 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அந்த வகையில் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நான்கு நாள் வசூலில், மங்காத்தா முதலிடம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் அனைத்து ரீரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளையும் இந்த படம் முறியடித்து முதலிடம் பிடிக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.