உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? 'ஹாட்ஸ்பாட் 3' வருமா? இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? 'ஹாட்ஸ்பாட் 3' வருமா? இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்


கடந்த வாரம் வெளியான படங்களில் 'ஹாட்ஸ்பாட் 2'வுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் நாளை நன்றி அறிவிப்பு விழாவை படக்குழு நடத்துகிறது. எந்த மாதிரியான வெற்றி என்று இயக்குனரும், படத்தில் நடித்தவருமான விக்னேஷ் கார்த்திக்கிடம் கேட்டோம்.

''ஹாட்ஸ்பாட் முதற்பாகம், கடந்த ஆண்டு 70 தியேட்டர்களில் வெளியானது. இந்த பாகம் 175 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. முதற்பாகம் 5 வாரங்களில் எடுத்த வசூலை, 2வது பாகம் 4 நாட்களில் எடுத்துவிட்டது. இதுவே பெரிய வெற்றி. இன்னமும் தொடர்ச்சியாக வெற்றிகரமாக ஓடிவருவதால் படத்தின் சாட்டிலைட், ஓடிடிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான கதை அமைந்துள்ளதால் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

கதைப்படி ஒரு முக்கியமான கேரக்டரில் ப்ரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார். இதற்கு முன்பு அவர் இந்த மாதிரி ரோலில் நடித்தது இல்லை. நடிப்பாரா என்றும் தயங்கினோம். ஹாட்ஸ்பாட் முதற்பாகம் அவருக்கு பிடித்து இருந்ததால், ஆஸ்ரேலியாவில் இருந்தவருக்கு பார்ட் 2 கதை சொல்லிவிட்டு, உங்க கேரக்டர் இப்படிப்பட்டது, துணிச்சலாக நடிக்க முடியுமா என்று கேட்டேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். அதுவே எங்களுக்கு சர்பிரைஸ் ஆக இருந்தது. அவர் கேரக்டர் படத்துக்கு பிளஸ். அதேபோல் ஹீரோயின் பவானிஸ்ரீயும் மாடர்னாக நடித்துள்ளார். தம்பிராமையா போர்ஷனுக்கு நல்ல வரவேற்பு. எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ரசிகர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை கொண்டாடுகிறார்கள். அதனால், 'ஹாட்ஸ்பாட் 3' எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம். அதற்கு தயாரிப்பாளரும் ரெடி'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !