உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸ் ஆகிறது சிம்புவின் 'சிலம்பாட்டம்'

ரீ ரிலீஸ் ஆகிறது சிம்புவின் 'சிலம்பாட்டம்'


சரவணன் இயக்கத்தில் சிம்பு, ஷனாகான், சினேகா, பிரபு, சந்தானம் நடித்த 'சிலம்பாட்டம்' படம் 2008ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்போது 17 ஆண்டுகளுக்குபின் இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.

இப்போது ரீ ரிலீஸ் சீசன் நடப்பதால் சிம்புவின் இந்த படத்தையும் 17 ஆண்டுகளுக்குபின் புத்தம் புது பொலிவுடன் வெளியிடுகிறார்கள். இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்து இருந்தார். சந்தானம் காமெடியும், சினேகா நடிப்பும் பேசப்பட்டது. யுவன்சங்கர்ராஜா பாடல்களும் ஹிட்டாகின. ரஜினியின் 'படையப்பா', விஜயகாந்த்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்' படங்கள் கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றன. இப்போது அஜித்தின் 'மங்காத்தா' ரீ ரிலீசில் ஹிட்டாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் வரும் சிம்புவின் 'சிலம்பாட்டம்' வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !