உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள்

தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள்


இந்த வாரம் 'அட்டக்கத்தி' தினேஷ் நடித்த 'கருப்பு பல்சர்', விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி நடித்த 'காந்தி டாக்ஸ்', அனுபமா பரமேஸ்வரனின் 'லாக்டவுன்', கிஷோர் நடித்த 'மெல்லிசை', வடிவுக்கரசியின் 'கிராணி' மற்றும் புதுமுகங்கள் நடித்த 'ராட்ட,
திரைவி' ஆகிய படங்கள் வருகிறது.

இப்படி பல படங்கள் வருவது சினிமாகாரர்கள் பலருக்கே தெரியவில்லை. காரணம், படம் குறித்து படக்குழுவோ, அதில் நடித்த ஹீரோவோ பேசவில்லை. கருப்பு பல்சர் பட விழாவில் ஹீரோ அட்டக்கத்தி தினேஷ் கலந்து கொள்ளவில்லை. அவர் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் பிசியாக இருப்பதால் கருப்பு பல்சரை கண்டு கொள்ளவில்லை.

லைகா தயாரித்த படம் என்றாலும் 'லாக்டவுன்' பட ரிலீஸ் பல முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பட விளம்பர நிகழ்ச்சிகளில் அனுபமா பரமேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. 'காந்தி டாக்ஸ்' படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் இப்போது தான் ரிலீசாகிறது என்பதால் அதில் நடித்த விஜய்சேதுபதி, அரவிந்தசாமி அதை கண்டு கொள்ளவில்லை என தகவல்.

'கிராணி' படத்துக்கு பாடல் வெளியீடு, பிரஸ்மீட் எதுவும் நடக்கவில்லை. கிஷோரின் 'மெல்லிசை'க்கும் டாக் இல்லை. மற்றவை சின்ன படங்கள். ஏதோ ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற பிரஷரில் இந்த படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆவதாக தகவல். இப்படி பட்ட நிலையில் வரும் படங்களுக்கு மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !