உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா?

'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா?


ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ரிலீஸ் ஆக வேண்டிய 'ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னை, கோர்ட் விவகாரத்தால் ரிலீஸ் ஆகாமல் தத்தளித்து வருகிறது. தொடர்ந்து சட்ட சிக்கல் நீடிப்பதால் எப்போது ரிலீஸ் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஜனநாயகன் பிரச்னைக்கு ஆதரவாக பலர் பேசிய நிலையில் படத்தின் ஹீரோ விஜய் மட்டும் இன்னமும் வாய் திறக்கவில்லை.

இந்த படத்துக்கு சம்பந்தமில்லாத பலர் தைரியமாக பேசி வரும் நிலையில், நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜய் மவுனம் சாதிப்பது சரியா? அவரைப் பேச விடாமல் தடுப்பது எது? இனியாவது பேசுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே சம்யம் கோலிவுட்டில் ஒரு சிலர் மட்டுமே ஜனநாயகனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்; மற்றவர்களோ எங்கள் படத்துக்கு விஜய் ஆதரவு கொடுத்ததில்லை, வெற்றி பெற்றபோது வாழ்த்தியதில்லை. எந்த விஷயத்திலும் அறிக்கையோ கருத்தோ சொன்னதில்லை. அவர் படத்துக்கு நாங்கள் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.

அரசியல் மட்டத்திலும் விஜய்யின் மவுனம் கிண்டல் அடிக்கப்படுகிறது, விவாத பொருளாகி உள்ளது. ஆகவே இனியாவது விஜய் பேசுவாரா அல்லது வழக்கமான மவுனத்தை தொடர்வாரா ஜனநாயகன் சென்சார் பிரச்னையில் அவர் கருத்து தான் என்ன? நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜனநாயகன் விஷயத்தில் விஜய் மவுனம் சாதித்தால் அது அவரின் அரசியல் வாழ்க்கையிலும் காலம் முழுக்க எதிரொலிக்கும் என்கிறார்கள். விஜய் மட்டுமல்ல படத்தின் இயக்குனரும் இதுவரை இந்த சர்ச்சை குறித்து பேசவில்லை. படத்தில் நடித்த பலரும் வாய் திறக்கவில்லை. கோர்ட் பிரச்னை, நாம் ஏதாவது பேசி வம்பில் மாட்டக்கூடாது என பலரும் பயப்படுகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !