தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி!
சென்டிமெண்ட் நிறைந்த சினிமா உலகில் ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படங்களில் இடம்பெற்றவர்கள் வெற்றி கூட்டணியாகி அடுத்தடுத்து இணைவார்கள். இந்நிலையில் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திலும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்த தீபிகா படுகோனேவை புக் பண்ணி இருக்கிறார். இது குறித்து ஒரு பேட்டியில் அட்லி கூறுகையில், ஏற்கனவே நான் இயக்கிய ஜவான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தார். அந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதன் காரணமாகவே இப்போது அல்லு அர்ஜுனை இயக்கும் படத்திற்கும் தீபிகா படுகோனேவையே ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர் என்னுடைய லக்கி நடிகை ஆகி விட்டார். அதோடு இந்த படத்தில் மிகவும் இளமையான ஒரு புதிய தோற்றத்தில் அவர் வெளிப்படுத்துகிறேன். அதனால் இந்த படத்தில் ரசிகர்கள் ஒரு மாறுபட்ட தீபிகா படுகோனோவை பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் அட்லி.