லாக் டவுன் கதை இதுவா?
ADDED : 1 days ago
ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த 'லாக்டவுன்' படம் ஜன.,30ல் வெளியாகிறது. தலைப்புக்கு ஏற்ப கொரோனா லாக்டவுன் சமயத்தில் இந்த கதை நடக்கிறதாம். ஒரு சூழ்நிலையால் அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பம் ஆகிறார். அதை கலைக்க நினைக்கிறார். ஆனால் லாக்டவுன் தொடங்கி விடுகிறது. அவரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை. டாக்டர்களை பார்க்க முடியாத சூழ்நிலை. அந்த சமயத்தில் அவர் என்ன முடிவெடுக்கிறார். அந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் என்ற ரீதியில் கதை நகர்கிறதாம். தேசிய விருது உள்ளிட்ட விருதுகளை குறி வைத்தும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ஹீரோ கிடையாது என்றும் கூறப்படுகிறது.