உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அதர்வா, நாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வர உள்ள படம் 'இதயம் முரளி'. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி உள்ள இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

வருகிற காதலர் தினத்தில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'தங்கமே தங்கமே' என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளரான தமன்.எஸ் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !