உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்?

சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்?


நடிகர் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதன் பின்னர் இந்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் பரவி வருகிறது. மிருணாள் தாகூரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க ஏற்கனவே சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முயற்சித்தனர். அவை எதுவும் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சிம்பு 51வது படத்தில் மிருணாள் தாகூர் இணைகிறாரா இல்லையா என்று


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !