உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார்

'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார்


கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'மாய பிம்பம்' படம் பரவலான வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புதுமுகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது. ஒருபுறம் பல புதிய படைப்புகள் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” படத்தின் இயக்குநர் கே.ஜே.சுந்தரம் இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெறும் படங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல்; புதிய கனவுகளை கண்டறிந்து, அவற்றைத் திரையில் மேஜிக்காக மாற்றும் ஒரு அற்புத பயணமாகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !