'டிமான்ட்டி காலனி'யில் கொடூர வில்லனாக குரு சோமசுந்தரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்ட்டி காலனி' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. தற்போது இதன் மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ஆன்ட்டி யாஸ்கெலைனன், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம், டங்கல் டிவி, ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் முக்கிய வில்லனாக 'தி லைப்ரேரியன்' என்ற மர்மமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம். டிமான்ட்டி காலனி சீரிஸில் லைப்ரேரியன் கதாபாத்திரம் மிக முக்கியமானது. அந்த வேடத்தில் இந்த 3ம் பாகத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். அந்த வேடத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இது குறித்து அஜய் ஞானமுத்து கூறும்போது, 'தி லைப்ரேரியன்' கதாபாத்திரம் 'டிமான்ட்டி காலனி' பிரான்சைஸில் மிக முக்கியமானது மற்றும் சுவாரஸ்யமானது. பழிவாங்கும் உணர்வை நோக்கமாகக் கொண்டது இந்த தீய கதாபாத்திரம்.
இதற்கு சாதாரண நடுத்தர வர்க்க மனிதரைப் போல தோன்றும், எந்த நேரத்திலும் கொடூரமாக மாறக்கூடிய ஒரு நடிகர் தேவைப்பட்டார். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒருவராக குரு சோமசுந்தரம் இந்தப் படத்தில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவரின் நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும்”என்றார்.