உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது

தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படம் தேவரா. இப்படம் ஜூனியர் என்டிஆர் படங்களில் அதிகப்படியாக வசூல் சாதனை செய்தது. அதையடுத்து தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவரா-2 படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கயிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் கொரட்டல்ல சிவா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும், தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்த ஜான்வி கபூர், சைப் அலிகான் ஆகியோரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !