உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.350 கோடி வசூல் கடந்த சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு'

ரூ.350 கோடி வசூல் கடந்த சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு'

2026ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகைக்கு வந்த படங்களில் 'பராசக்தி' படம் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்தது. அவ்வளவு வசூலைக் கடந்தாலும் அது லாபமா, சமமா, நஷ்டமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

அதே சமயம் தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த படங்களில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வெளிவந்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படம் 15 நாட்களில் உலக அளவில் 358 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல தெலுங்கு பிராந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சங்கராந்திக்கு வெளியான பிரபாஸின் பான் இந்தியா படமான 'தி ராஜா சாப்' படத்தை விடவும், மற்ற படங்களை விடவும் சிரஞ்சீவி படம் வசூலைக் குவித்து வருவது தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படம் ஓடி வருவதால் எப்படியும் 400 கோடியைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !