உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா

முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தெலுங்கு, தமிழ் தாண்டி ஹிந்தியிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ‛ரணபலி' படத்திலும், ‛மைசா' என்ற படத்தில் முதன்மை வேடத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடிக்கிறார்.

பொதுவாக பிரபலங்கள் பற்றி நிறைய டிரோல்கள் வரும். ஒரு பேட்டியில் இதுதொடர்பான கேள்விக்கு இவர் அளித்த பதிலில் கூறும்போது, ‛‛பொய்யான வதந்தி பரப்புவோருக்கு எதற்காக விளக்கம் அளிக்கணும். அப்படி பதிலளித்தால் அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். சிலர் பணத்திற்காக இப்படி செய்கின்றனர். இதுபோன்ற முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !