உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதுரை ரசிகரை சென்னைக்கு அழைத்து தங்க சங்கிலி அணிவித்து கவுரவித்த ரஜினிகாந்த்

மதுரை ரசிகரை சென்னைக்கு அழைத்து தங்க சங்கிலி அணிவித்து கவுரவித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை தனது படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும் சரி அல்லது வீட்டில் இருக்கும் போது முக்கியமான விசேஷ நாட்களிலும் சரி, தனது ரசிகர்களை நேரில் சந்திப்பதையும் வாழ்த்து சொல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அது மட்டுமல்ல பொதுவெளியில் கவனம் ஈர்க்கும் விதமாக மக்களிடத்தில் பல நல்ல செயல்களை செய்யும் தனது ரசிகர்களையும் மற்றும் ரசிகர்கள் அல்லாதவர்களையும் கூட நேரில் வரவழைத்து அவர்களை பாராட்டி கவுரவிக்கவும் அவர் தயங்குவதில்லை.

அந்த வகையில் மதுரையில் ரஜினி ரசிகரான அல்போன்ஸ் என்கிற ரஜினி சேகர் ஹோட்டல் கடை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். அங்கே பல வருடங்களாக இவர் பரோட்டாவை வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே வழங்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்தாலும் கூட இவர் தனது கடையை தேடி வந்து சாப்பிடும் சாதாரண மக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக இப்படி தொடர்ந்து குறைந்த விலையில் இந்த சேவையை செய்து வருகிறார்.

இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தகவல் கேள்விப்பட்டு ரஜினி சேகரை அவரது குடும்பத்துடன் சென்னைக்கு வரவழைத்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த் சேகர் பற்றி குறிப்பிடும்போது சிறந்த உள்ளம் கொண்டவர் என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !