‛மன சங்கர வர பிரசாத் காரு' பட இயக்குனருக்கு கார் பரிசளித்த சிரஞ்சீவி
ADDED : 22 hours ago
கடந்த சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த மன சங்கர வர பிரசாத் காரு மற்றும் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சிறப்பு தோற்றத்தில் வெங்கடேஷ் இணைந்து நடித்த மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக மாறி, வெற்றி பெற்று நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஏற்கனவே பகவந்த் கேசரி, சங்கராந்தி கி வஸ்துனம் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து சிரஞ்சீவியுடனும் இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார் அனில் ரவிபுடி. இந்த வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை இயக்குனர் அனில் ரவிபுடிக்கு பரிசளித்துள்ளார் சிரஞ்சீவி.