‛மேப்படியான்' பட இயக்குனருடன் தனது 367 வது பட அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால்
சமீபகாலமாகவே ஒரு பக்கம் மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் ஒன்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மோகன்லால். அந்த விதமாக கடந்த வருடம் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரும் அதற்கு முன்பு இரண்டு சிறிய வெற்றி படங்களை இயக்கியவர் தான். இந்த நிலையில் தற்போது தனது 367வது பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மோகன்லால்.
இந்த படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். விஷ்ணு மோகன் இயக்குகிறார். இவர் கடந்த 2022ல் உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்து வெளியான மேப்படியான் என்கிற படத்தை இயக்கியவர். மேப்படியான் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியை வசூலையும் பெற்றது. அதற்காக உன்னி முகுந்தன் இவருக்கு ஒரு காரையும் பரிசளித்தார். அதைத்தொடர்ந்து கத இன்னுவர என்கிற படத்தை இயக்கிய விஷ்ணு மோகன், அந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெறாவிட்டாலும் கூட தனது மூன்றாவது படத்திலேயே மோகன்லாலை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.