உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கத்தி வீசிய ஜெமினி கணேசன் உயிர் தப்பிய நம்பியார்

பிளாஷ்பேக்: கத்தி வீசிய ஜெமினி கணேசன் உயிர் தப்பிய நம்பியார்


ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் 'கற்புக்கரசி'. ஜெமினி, நம்பியாருடன் எம்.கே.ராதா, கே.ஏ.தங்கவேலு, ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.வெங்கடாசலம் உள்பட பலர் நடித்தனர். ஜெமினியின் ஜோடியாக சாவித்ரி நடித்தார். சந்திரிகாவாக ஜி.வரலட்சுமி நடித்தார். இவர்கள் தவிர இ.வி.சரோஜா, கே.ஆர்.செல்லம், எம்.சரோஜா, எஸ்.ரேவதி ஆகியோரும் நடித்தனர். சி.ராமநாதன் படத்துக்கு இசையமைத்தார்.

பெண்களை ஏமாற்றி அவர்களை பலாத்காரம் செய்து கொல்லும் கொடூர மந்திரவாதியாக நம்பியாரும், அவரிடமிருந்து பெண்களை காப்பாற்ற ஜெமினி கணேசன் போராடுவதும்தான் கதை. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெமினி கணேசனும், நம்பியாரும் மோதிக் கொள்ளும் காட்சியொன்றில் ஜெமினி நம்பியாரை குறி வைத்து கத்தி வீச வேண்டும். படப்பிடிப்பு நடந்த அரங்கிற்குள் இரண்டு பெண்கள் வர, உற்சாக மிகுதியில் ஜெமினி இயக்குனர் ஆக்ஷன் சொல்லும் முன்பே கத்தியை நம்பியாரை நோக்கி வீசிவிடுவார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நம்பியார் டக்கென விலகி கொள்வார். என்றாலும் அவரது இடது கண்ணோரம் சிறிய காயத்தை ஏற்படுத்தியது கத்தி. அந்த காயம் அவருக்கு கடைசி வரையில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !