சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்தடுத்த படங்களை உறுதி செய்த தயாரிப்பாளர்
ADDED : 7 minutes ago
அர்ஜுன் ரெட்டி, அனிமல் என இரண்டு படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் சந்தீப் ரெட்டி வங்கா. தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து 'ஸ்பிரிட்' எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் டி சீரியஸ் நிறுவனர் பூஷண் குமார் அளித்த பேட்டியில் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்தடுத்த படங்களை உறுதி செய்துள்ளார். அதன்படி, ஸ்பிரிட் படத்தை இயக்கி முடித்தவுடன் சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் 2ம் பாகம் மற்றும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக உறுதி செய்துள்ளார்.