உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பல மொழிகளை கற்கிறேன்.. ரிஷப் ஷெட்டி, ராஜமவுலி படங்களில் நடிக்க ஆசை: ராஷி கண்ணா

பல மொழிகளை கற்கிறேன்.. ரிஷப் ஷெட்டி, ராஜமவுலி படங்களில் நடிக்க ஆசை: ராஷி கண்ணா


நடிகை ராஷி கண்ணா, ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும், அதன் பிறகு தெலுங்கு படங்களில் சில ஆண்டுகள் நடித்தார். பின்னர் தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4, சர்தார்' என பல படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழில் மாறி மாறி கவனம் செலுத்தி வந்த ராஷி கண்ணா, தற்போது மீண்டும் ஹிந்தியில் தனது பார்வையை திருப்பியுள்ளார். தற்போது ஹிந்தியில் 2, 3 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மொழிகளை கற்பது எனக்​குப் பிடிக்கும். அதை ஒரு வேலை​யாகச் செய்து வருகிறேன். ஹிந்​தி, ஆங்​கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளை நன்​றாகப் பேசுவேன். இப்​போது பஞ்​சாபி​யும் பேசக் கற்​றுள்​ளேன். கொஞ்சம் பெங்காலியும் தெரியும். ஒவ்​வொரு மொழியிலும் சிறந்த கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்டும் என்​பது விருப்​பம்.

வித்தியாசம்
கதாபாத்திரங்களே முக்கியமாக இருந்தாலும், பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ள அம்மொழியை கற்பது அவசியம். அதனால், நான் எந்த மொழி படங்களில் நடிக்கிறேனோ, அந்தந்த மொழிகளை கற்றுக்கொள்கிறேன். பவன் கல்​யாண் ஹீரோ​வாக நடிக்​கும் 'உஸ்தாத் பகத்​சிங்' படத்​தில் நடிக்க வாய்ப்பு வந்​த​போது, பவன் கல்யாணுக்காக கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒவ்​வொரு​வரும் சிறப்பான படத்​தைக் கொடுக்கவே சினி​மாவில் உழைக்​கிறார்​கள். அதற்காக அனை​வரும் சிறந்த பங்​களிப்பை வழங்கி வருகிறார்​கள். பல மொழிகளில் பணியாற்றி​னாலும் எந்த வித்தியாசத்​தை​யும் நான் பார்க்க​வில்​லை.

விருப்பம்
நடிகர்கள் ரன்​பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்​தி​யாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்​கிறார்​கள். அவர்​களு​டன் நடிக்க வேண்​டும் என்ற ஆசை இருக்​கிறது. அதேபோல், இயக்​குனர் சஞ்​சய் லீலா பன்​சாலி, தனது படங்​களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்பதால், அவரது இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். இந்த பட்டியலில், ரிஷப் ஷெட்​டி, ராஜமவுலி ஆகியோரும் இருக்கிறார்கள். இவ்​வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !