வசூல் நிலவரத்தை சொல்ல மறுக்கும் பட நிறுவனங்கள்
இந்த மாதம் வெளியான படங்களில் பொங்கலுக்கு வந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 100 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாட்களில் அந்த படம் எவ்வளவு வசூலித்தது. ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு என்பதை இன்னமும் படக்குழு சொல்லவில்லை. கார்த்தியின் வா வாத்தியார் வசூல் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் 25 கோடி வரை வசூல் என்றாலும் , ஏனோ தயாரிப்பு தரப்பு அறிக்கை விடவில்லை. திரவுபதி 2 வசூல் குறித்தும் யாரும் வாய் திறக்கவில்லை. இந்த வாரம் வந்த மற்ற படங்கள் சில கோடி வசூலையாவது ஈட்டியதாக சினிமாகாரர்களுக்கே தெரியவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களின் வசூல் நிலவரத்தை ஓரளவு வெளிப்படையாக அந்த பட நிறுவனங்கள் அறிவிக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா அந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது இல்லை. இந்த மாத படங்களில் தலைவர் தம்பி தலைமையில் மட்டுமே வெற்றி படம் என்று சொல்லப்படுகிறது.