உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛இருமுடி'யில் ரவி தேஜா, பிரியவா பவானி சங்கர்

‛இருமுடி'யில் ரவி தேஜா, பிரியவா பவானி சங்கர்

தெலுங்கில் நின்னு கோரி, மஜிலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வானா. இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜாவும், கதாநாயகியாக பிரியா பவானி சங்கரும் நடிக்கின்றனர். இன்று ரவி தேஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'இருமுடி' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் சபரிமலைக்கு மாலை போட்டு செல்லும் பக்தர் ஆக ரவி தேஜா நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆக் ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் ஐயப்பன் சுவாமியை சுற்றிய கதைகளத்தில் இருக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !