மூன்று நாட்களில் 129.89 கோடி வசூலித்த ‛பார்டர் 2'
ADDED : 7 minutes ago
அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித், அஹான் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் திரைக்கு வந்துள்ள படம் ‛பார்டர் 2'. 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் தேசபற்று படமாக வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ.32.10 கோடி வசூலித்த படம் தொடர் விடுமுறை காரணமாக அடுத்தடுத்து வசூலை ஈட்டியது. உலகளவில் மூன்று நாட்களில் ரூ.129.89 கோடி வசூலித்துள்ளதாக படக்கு அறிவித்துள்ளது.