கே.ஜி.எப் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்
ADDED : 1 hours ago
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் அடுத்து வெங்கட் பிரபு , ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புதிதாக கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1, 2 , காந்தாரா 1, 2 மற்றும் சலார் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை கன்னட சினிமாவில் யுவரத்னா போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கவுள்ளாராம். இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.