சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா?
ADDED : 782 days ago
பிம்பிசாரா பட இயக்குனர் மலிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக 'விஷ்வாம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இவர் அல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, இஷா சாவ்லா, சுரபி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஆஷிகா ரங்கநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.