புஷ்பா வில்லி அனுசுயா பரத்வாஜின் ஆனந்த குளியல்!
ADDED : 503 days ago
தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த அனுசுயா பரத்வாஜ், ராம்சரண் தேஜா நடித்த ரங்கஸ்தலம் மற்றும் யாத்ரா, கில்லாடி என பல படங்களில் நடித்தவர், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் அதிரடி வில்லி வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார். தற்போது புஷ்பா- 2 படத்திலும் டெரரான வில்லியாக நடித்து வருகிறார். அதோடு தமிழில் பிளாஷ்பேக் என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் ஒரு அருவியில் ஆனந்த குளியல் போட்டுள்ளார் அனுசுயா பரத்வாஜ். கவர்ச்சிகரமான உடை அணிந்து அவர் நீராடிய அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.