மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
469 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
469 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
469 days ago
பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் இதில் கலந்து கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் ரத்த பரிசோதனை நடத்தினர்.
அதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிசிபி காவல்துறை ஆயத்தமாகி உள்ளது. நடிகை ஹேமாவிற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், அவரைக் காப்பாற்ற ஆந்திர, தெலுங்கானாவில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் சிசிபி-க்கு நெருக்கடி கொடுப்பதாக கன்னட இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என கன்னடத் திரையுலக வட்டாரங்களிலும் பேசிக் கொள்கிறார்கள்.
469 days ago
469 days ago
469 days ago