உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெனெரல் ஹாஸ்பிடல் என்ற ஹாலிவுட் தொடரில் நடித்து பிரபலமானவர் ஜானி வாக்டர்(37). மே 25ல் தனது நண்பர் உடன் வெளியே சென்று விட்டு வந்துள்ளார். அப்போது பார்க்கிங்கில் இருந்த தனது காரில் கொள்ளையர்கள் மூன்று பேர் எதையோ திருட முயற்சித்துள்ளனர். இதை தடுக்க முற்பட்ட ஜானி மீது மூன்று கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து மூவரும் தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். ஜானி வாக்டரின் இந்த திடீர் இழப்பு ஹாலிவுட் பிரபலங்களை அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !