உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்.27ல் வெளியாகும் அமரன் திரைப்படம்

செப்.27ல் வெளியாகும் அமரன் திரைப்படம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. தற்போது இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !