கவுதம் மேனன் இயக்கும் படத்தை தயாரித்து, நடிக்கும் மம்முட்டி
ADDED : 536 days ago
விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திர படம் முடிந்தும் சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தற்போது மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் கவுதம் மேனன். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதோடு, இந்த படத்தை மம்முட்டியே தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. அப்போது மம்முட்டி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார் கவுதம் மேனன்.