பேஸ்புக் காதல் : தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
ADDED : 491 days ago
நடிகர் யோகி பாபு காமெடியனாகவும், கதையின் நாயகனாகவும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், ஒரு மகனும், மகளும் உள்ளனர். யோகி பாபுவின் தம்பியான விஜயன் தற்போது யோகிபாபுவின் கால்ஷீட்டை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் விஜயனுக்கும் மைசூரைச் சேர்த்த ஒரு பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் காதல் உருவானது. ஆனால் அந்த பெண் வேறொரு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் யோகி பாபு இதில் தலையிட்டு அந்த பெண் வீட்டாரை சந்தித்து பேசி தனது தம்பி விஜயனின் திருமணத்தை தனது சொந்த ஊரான செய்யாற்றில் ஜூன் 3ம் தேதி நடத்தி வைத்திருக்கிறார். இந்த திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.