உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன் ரீ-ரிலீஸ் : முதல் நாளில் 1.10 கோடி வசூல்

இந்தியன் ரீ-ரிலீஸ் : முதல் நாளில் 1.10 கோடி வசூல்

கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இந்தியன்- 2 மற்றும் இந்தியன் -3 ஆகிய படங்களில் இணைந்துள்ளார்கள். இதில், இந்தியன்-2 படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், கமலும், ஷங்கரும் முதன்முதலாக இணைந்த இந்தியன் படத்தை கடந்த 7ம் தேதி ரீ-ரிலீஸ் செய்தார் அப்படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம். அப்படி வெளியான முதல் நாளே இந்த படம் 1.10 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !