மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
450 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
450 days ago
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்திருக்கும் படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றுவது இல்லாமல் குரலையும் கம்பீரமாக மாற்றி டப்பிங் பேசப் போகிறார்.
மேலும், இந்த அமரன் படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி திரைக்கு வருவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் அமரன் படம் தள்ளிப் போனது. இந்த நிலையில் தற்போது புஷ்பா-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போதைய நிலவரப்படி விக்ரமின் தங்கலானும், சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
450 days ago
450 days ago