தாய்லாந்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அஞ்சலி
ADDED : 518 days ago
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை அஞ்சலி அவருடைய 39வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். தனது பிறந்தநாளை இங்கு கொண்டாடாமல் தாய்லாந்து நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவான கோ சமுய் என்ற இடத்திற்கு அவர் சுற்றுலா சென்று அங்குதான் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணம் முடிந்தது. ஈடு இல்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. புதிய சாகசங்கள், வயது குறைந்த மற்றும் நாம் அழும் வரை அதிக சிரிப்பு நிறைந்த ஒரு வருடம் இதோ. அதை மறக்க முடியாததாக மாற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் “ஏழு கடல் ஏழு மலை” படத்திலும், தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் அந்தப் படங்கள் வெளியாக உள்ளன.