பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி?
ADDED : 807 days ago
மெரினா, பசங்க, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு பாண்டிராஜின் அடுத்த படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. விஷால், ஜெயம் ரவி ஆகிய நடிகர்களிடம் பாண்டிராஜ் கதை கூறியதாக கூறப்பட்டது. இறுதியாக ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .